பௌத்த சமயம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் நேற்றிரவு 10.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் அவருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அவர் நாடு திரும்பாது, தமது மனைவி மற்றும் பிள்ளைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.