வடக்கு மாகாணத்திற்கு காணி அல்லது பொலிஸ் அதிகாரம்: அரசாங்கம் முடிவு

Date:

வடக்கு மாகாணத்திற்கு காணி அல்லது பொலிஸ் அதிகாரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஏற்கனவே முன்வைத்துள்ள யோசனைகள் அடங்கிய அறிக்கை ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை வடக்கு மாகாண சபை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராகி வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் அது தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை எனக்கூறியுள்ளார்.

எந்த நபரும் இந்திய பிரதமரை சந்திக்க முடியும் எனவும் அது தொடர்பாக அரசாங்கம் எந்த எதிர்ப்பையும் முன்வைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொள்ள உள்ள விஜயத்தின் பின்னர், இந்திய பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...