7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான் நாட்டுக்குச் சென்ற சவூதி அமைச்சர்!

Date:

டெஹ்ரான்,-ஈரான் – சவூதி அரேபியா நாடுகளுக்கு இடையே ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நட்புறவு ஏற்பட்ட நிலையில், சவூதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று ஈரான் சென்றார்.

மேற்காசிய நாடான சவூதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல்நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016ல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சம்பவம் பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா பிரிவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஈரான் உடனான உறவை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன.

இந்த விடயத்தில் மத்தியஸ்தம் செய்து, இருநாட்டு பிரதிநிதிகளுடனும் சீனா தொடர்ந்து ஆலோசனை நடத்தியதன் பலனாக, கடந்த மார்ச்சில் சவூதி யும், ஈரானும் சமாதானம் அடைந்தன.

இருநாட்டு உறவுகளும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, ஈரான் மற்றும் சவூதி அரேபியாவின் ராஜாங்கப்பணிகள் தூதரககள் வாயிலாக சமீபத்தில் தொடங்கின.

இதன் அடுத்தகட்டமாக, ஈரான் சென்றுள்ள சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான், சவூதி அரேபியாவுக்கான துாதரகத்தை அதிகாரப் பூர்வமாக திறந்து வைக்க உள்ளார்.

அவரை , ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிராப் தொல்லாஹியன் வரவேற்றார்.

இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர். இது குறித்து ஈரான் அமைச்சர் அமிராப் கூறுகையில்,

“சூடானில் போர் தொடர்வது குறித்து நாங்கள் எங்கள் கவலையை தெரிவித்தோம்.
”மேலும் சில பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரகள் குறித்தும் விவாதித்தோம்,” என்றார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...