உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை ரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானம்?

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவிக்கின்றன.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை ரத்துச் செய்துவிட்டு, மீண்டும் வேட்புமனுக்களை கோருவதே சிறந்தது என குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவிக்கின்றன.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,711 வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டன. அதற்காக 80,672 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...