தங்கம் கடத்திய அலி சப்ரிக்கு இல்லாமல் போகும் ‘VVIP’ வரப்பிரசாதம்!

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட பிரமுகர்  வெளியேறல் பகுதியூடாக தங்கம்  மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்தி வந்து மாட்டிக்கொண்ட, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு உரித்தான  அதி முக்கிய பிரமுகர் விஷேட வரப்பிரசாதத்தை (VVIP Facility) இரத்து செய்ய தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதற்கான ஆலோசனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன  பாராளுமன்ற அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

அலி சப்ரி ரஹீம், தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட பின்னர், அபாரதம் செலுத்திவிட்டு விடுதலையாகியுள்ளார்.

இது தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர்  சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந் நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்துள்ள சபாநாயகர், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விமான நிலையத்தில் கிடைக்கும்  அதி விஷேட பிரமுகர் வரப்பிரசாதத்தை  ரத்து செய்ய  உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது சிவில் விமான சேவைகள்   திணைக்களத்தின் நிலைப்பாட்டினையும் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...