மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சாதனை

Date:

மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் (Sri Lanka Association for Software Services Companies) 2023ம் ஆண்டிற்கான தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில் தொழில்நுட்ப சிறார்கள் (ITech Kids) பிரிவில் மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸூஹ்றா நதா (13) தேசிய ரீதியில் வெற்றி பெற்ற 5 சாதனையாளர்களில் (outstanding achiever) ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நேற்று (16ம் திகதி) இடம்பெற்ற பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளுக்குமான புத்தாக்க சிந்தனைகளுக்கான தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தரம் 9ல் கல்வி கற்கும் சாய்ந்தமருதினை  சேர்ந்த ஸூஹ்றா நதாவினால் முன்மொழியப்பட்ட சிறுவர்களுக்கான SDG கற்றல் தொடர்பான மொபைல் பயன்பாட்டு மென்பொருள் செயலிக்காக (SDG Learning Mobile App for Children) இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நோர்வேயின் தூதுவர் டிரினி ஜோர்னலி எஸ்கடேலியினால் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பரப்புதல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களின் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களிப்பினை செய்து வரும் மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு புத்தாக்க சிந்தனையாளர்களுக்காக கடந்த சில வருடங்களாக இவ்விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.

இம்மாணவி தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் அஸ்ரப் ஹஸ்னா செர்பின் ஆகியோரின் மூத்த புதல்வியாவார்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...