வடக்கில் இனங்களுக்கு இடையில் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சி:பலாங்கொட காசியப்ப தேரர்

Date:

வடக்கில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இனவாத்தை ஏற்படுத்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

திரியாய், குருந்தூர்மலை விகாரைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

திரியாய் விகாரையை சுற்றி தமிழ் மக்களின் வயல் காணிகள் இருப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது. அந்த பிரதேசத்தில் வயல் காணிகள் எதுவுமில்லை.

ஆயிரணக்கான வருட வரலாற்றுக்கு உரிமை கோரும் இந்த பிரதேசத்தில் கடந்த போர் காலத்தில் சிலர் காணிகளை கைப்பற்றி இருந்தாலும் பௌத்த வழிப்பாட்டு தலங்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அங்கு இருக்கின்றன.

அரச வளங்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

பௌத்த சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக மேலும் சிலருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காசியப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...