தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ”இரட்டை வாட்டில்ட் கெசோவரி” (Double Wattled Cassowary) பறவைகள் இன்னும் ஒரு மாதத்தின் பின்னர், பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெஹிவளை மிருக காட்சிசாலை தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய மற்றும் ஆபத்தை விளைவிக்க கூடிய பறவைக் கூட்டத்தில், 9 மாதமான ஆண் கெசோவரி பறவையொன்றும், இரண்டு பெண் கெசோவரி பறவைகளும் உள்ளதாக தெஹிவளை மிருக காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் தினுசிக்கா மானவடு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள குறித்த பறவைகள் தற்போது, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.