சர்வகட்சி மாநாடு இன்று!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு இன்று (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தமிழ் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முன்னர் அரசாங்கத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தமது கட்சியின் கருத்தை தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் முஸம்மில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் சர்வகட்சி மாநாடு தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கருத்து வெளியிட்டார்.

எவ்வாறாயினும், இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளை ஜனாதிபதி உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...