இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

அதேநேரம் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழையினால் அந்த கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன் அந்த கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்குக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...