8 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை பலியெடுத்த பஸ் விபத்து – தொடரும் தேடுதல் (VIDEO)

Date:

மூன்றாம் இணைப்பு

பொலன்னறுவை – மனம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 8 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் 9 பேரின் சடலங்கள் பொன்னறுவை வைத்தியசாலையிலும், ஒரு சடலம் மனம்பிட்டி வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் இணைப்பு

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் மனம்பிட்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

BREAKING NEWS :- நீரில் மூழ்கிய பஸ் – 8 பேர் உயிரிழப்பு : மூழ்கிய பயணிகளை காப்பாற்ற தீவிர முயற்சி!

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...