UPDATE: நீரில் மூழ்கிய பஸ் – 10 பேர் உயிரிழப்பு : மூழ்கிய பயணிகளை காப்பாற்ற தீவிர முயற்சி

Date:

இரண்டாம் இணைப்பு

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் மனம்பிட்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

BREAKING NEWS :- நீரில் மூழ்கிய பஸ் – 8 பேர் உயிரிழப்பு : மூழ்கிய பயணிகளை காப்பாற்ற தீவிர முயற்சி!

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...