மதஸ்தலங்களின் சொத்து விபரம் திரட்டல்: அரசாங்கம் அவசர நடவடிக்கை

Date:

நாட்டிலுள்ள அனைத்து மதஸ்தலங்களின் அசையும் அசையா சொத்துகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட விபரங்களை தாமதமின்றி வழங்குமாறு புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரைக் கோரியுள்ளார்.

இதே­வேளை பள்­ளி­வா­சல்கள் மாத்­தி­ர­மல்ல நாட்­டி­லுள்ள அனைத்து மதஸ்­த­லங்­களின் சொத்­துகள் மற்றும் தக­வல்­களைப் பெற்றுக் கொள்ள அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தெ­னவும் மகா­நா­யக்­கர்கள் மற்றும் ஏனைய மதத்­த­லை­வர்­களின் ஒத்­து­ழைப்­புடன் இந் ­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

பதிவு செய்­யப்­பட்­டவை மற்றும் பதிவு செய்­யப்­ப­டா­தவை என்ற வகையில் இரு வேறு பிரி­வு­களில் தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்டு தற்­போது அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் தற்­போது அரை­வாசி பணி­ பூர்த்­தி­யா­கி­யுள்­ளது என பணிப்­பாளர் இஸட் ஏ.ஏம்.பைசல்  தெரி­வித்தார்.

ஆரம்­பக்­கட்­ட­மாக பள்­ளி­வா­சல்கள், அதன் சொத்­துகள் தொடர்­பான விப­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்டு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. அடுத்த கட்­ட­மாக திணைக்­க­ளத்தின் கீழுள்ள ஏனைய நிறு­வ­னங்கள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­படும் என்றும் அவர் கூறினார்.

பள்­ளி­வா­சல்­களின் சொத்­துகள் தொடர்­பான விப­ரங்­களைத் திரட்­டு­வ­தற்கு வக்பு சபை பாரிய ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­வ­தா­கவும் இதனால் இந்­தப்­பணி இல­கு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்த அவர் வக்பு சபைக்கு தனது நன்­றி­களை சமர்ப்­பிப்­ப­தா­கவும் கூறினார்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...