வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது!

Date:

மாதாந்த மின் கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படும் மருத்துவமனையின் செலுத்தப்படாத கட்டணங்கள் குறித்து பல்வேறு பிரிவுகளின் சலசலப்புக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் சுமார் 3 பில்லியன் ரூபாவை மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு 339 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டும்.

சுகாதார அமைச்சு 120 மில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பொது திறைசேரி எஞ்சிய தொகையை மின்சார சபைக்கு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், சுகாதார நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பல பில்லியன்கள் இருந்தாலும், பொதுமக்களுக்கு அளிக்கும் சேவையை கருத்திற்க் கொண்டு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...