AI தொழில்நுட்பத்தை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது ஆழமான உளவியல் பாதிப்பு ஏற்படும் : ஐ.நா எச்சரிக்கை

Date:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, அமெரிக்காவின் நியூயோர்க்கில்  (18) நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரிட்டன் தலைமையேற்று நடத்தியிருந்தது.

உலக நாடுகளில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் பற்றிய விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான விவாதக் கூட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில மாதங்களாகவே நடத்தி வருகிறது.

இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகள் செயற்கை நுண்ணனறிவுத் தொழில்நுட்பத்தின் சாதக, பாதங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது, நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும்.

இதில், உயிர் சேதங்களும் ஏற்படும். செயற்கை நுண்ணறிவு (AI) – சாட் ஜிபிடி (Chat GPT) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்படும் செய்திகள், உருவங்கள், படங்கள் தவறான தகவல் மற்றும் வெறுப்பை பரப்பி மனித செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...

இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள்...

ஜனாதிபதி தலைமையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கலந்துரையாடல்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட...