முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வீடு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
குறித்த வீட்டை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மல்வானையில் உள்ள இந்த சொத்துக்கு எவரும் உரிமை கோரவில்லை என பத்திரிகைகள் மூலம் அறிந்துக்கொண்ட பின்னர், அதனை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வீடு அரசுக்கு சொந்தமானது என்று தெரியாமல், போராட்டகாரர்கள் அதற்கு தீ வைத்திருக்கலாம் எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.