லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளில் மாற்றம் !

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ் தெரிவித்தார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்திற்கு அமையவே லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் குறித்த எரிபொருள் வகைகளின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...