சவுதி அரேபியாவில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு: இலங்கையில் இருந்து 3 மார்க்க அறிஞர்கள் பங்கேற்பு!

Date:

சவுதி அரேபியா இஸ்லாமிய மத விவகாரங்கள் அமைச்சு “உலக இஸ்லாமிய நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் இன்று(12) மற்றும் நாளை (13) ஆம் திகதிகளில் ஒரு இஸ்லாமிய மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இம் மாநாடு மக்கா முக்கர்மாவில் நடைபெற உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமார் 85 நாடுகளிலிருந்து 150 மார்க்க அறிஞர்களை சவுதி அரேபியா வரவழைத்துள்ளதாக அஷ்ஷெய்க் தாருள் இமான் நிறுவனத்தின் செயலாளர் பௌஸுல் அலவி(மதனி) தெரிவித்தார்.

உலகெங்கிலும் இருக்கும் இஸ்லாமிய மார்க்க நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நடைபெறும் இம்மாநாட்டில் பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இலங்கையில் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று மார்க்க அறிஞர்கள் மக்கா சென்றுள்ளார்கள்.

நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில்,உலக இஸ்லாமிய மத நிறுவனங்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கும் பங்களிப்பு, இந் நிறுவனங்களுக்கு மத்தியில் காணப்படும் தொடர்புகள், விட்டுக் கொடுப்பும் சகவாழ்வும், குர்ஆனையும் ஹதீஸையும் பற்றிப் பிடிப்பதன் அவசியம், தீவிரவாதத்தை களைவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்புகள், ஒழுக்க சீர்கேடுகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இந்த மாநாட்டை சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் வழிகாட்டலில் சவுதி அரேபிய மத விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. உலக முஸ்லிம்களின் கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் உறுதுணையாக திகழும் சவுதி அரேபியாவின் இம்மாநாடு சமகாலத்தில் அவசியமான ஒன்றாகும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

தற்காலத்தில் ஏற்படும் நவீன பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் மார்க்க அறிஞர்களின் பங்களிப்பு பற்றியும் விரிவாக ஆராயப்படவுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமை பேணுதல், இஸ்லாத்தை பிரசாரம் செய்யும் விடயத்தில் சவுதி அரேபியாவின் அனுபவங்கள் போன்ற விடயங்களும் இம்மாநாட்டில் ஆராயப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...