வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள உத்தரவு!

Date:

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி வீதங்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

அடமான வட்டி வீதங்கள், கடன் வட்டி வீதங்கள், கடனட்டை வட்டி வீதங்கள்போன்றவற்றின் வட்டி வீதங்களை குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வட்டி வீதத்தை பேணுவது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1949 ஆம் ஆண்டின் பணச் சட்டம் எண் 58 இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் ஊடாக வட்டி வீதங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சராசரி கடன் வட்டி வீதத்தை 13.5 சதவீதமாக பேணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடமான வட்டி விகிதம் 18 சதவீதமாகவும், கடனட்டை வட்டி விகிதம் 28 சதவீதமாகவும் பராமரிக்கப்படும் என்று உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின்...

இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய சீருடை!

இலங்கை காவல்துறை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொதுப்...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு...