வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய தீர்மானம்!

Date:

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே அவற்றின் தற்போதைய 11.00 மற்றும் 12.00 சதவீத மட்டத்தில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டம் நேற்று ( 23)  நடைபெற்றது. இந்த குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை தளர்த்தல் நடவடிக்கைகளுக்கு நடைமுறையில் இருக்கும் வீதங்கள் மற்றும் சந்தை வட்டி வீதங்களை விரைவாக சரிசெய்வதற்கு இடமளிக்க வேண்டும். எவ்வாறாயினும், சில கடன் வழங்கும் பொருட்களின் சந்தை வட்டி வீதங்கள் அதிகமாக இருப்பதையும் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு இணங்கவில்லை என்பதையும் மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், சமீபத்திய பணவியல் கொள்கை தளர்த்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப ஒட்டுமொத்த சந்தைக் கடன் வட்டி வீதங்களில் விரைவான குறைப்பை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...