இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனையடுத்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்தை பார்வையிட்ட பின் அமெரிக்க நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் காலநிலை மாற்ற தழுவல் திட்டமான கார்பன் புளூபிரிண்ட் கடற்பாசி பயிரிச்செய்கை இடம்பெற்றுவரும் பிரதேசங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.