இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பது உண்மையா? விசாரிக்க கோருகிறது ஜம்இய்யத்துல் உலமா!

Date:

நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக சமிந்த விஜேசிறி எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் தீவிரமாக தேடிப்பார்க்குமாறும் முறையான நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தெரிவித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்தக்கடிதத்தில் மேலும்,

2023.08.23ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்தின் போது சமிந்த விஜேசிறி எம்.பி. , ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் குண்டுதாரிகள் எமது நாட்டில் இருப்பதாகவும் அதுதொடர்பில் வஜிர அபேவர்தன எம்.பியும் அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

கடந்த காலங்களில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவங்களினால் எமது நாட்டில் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தது என்பதை நாங்கள் அறிவோம்.

ஒரு குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் இதற்கு முன்னரே எங்களுக்கு கிடைத்த தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தபோதும், அதுதொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்காமை அல்லது தேடிப்பார்க்காமையின் காரணமாக கிறிஸ்தவ மக்கள் மாத்திரமின்றி ஒட்டுமொத்த மக்களும் பாதிப்படைந்திருந்தனர் – என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.அர்கம் நூரமித் அவர்களினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...