இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ நிலையாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜயமான்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த எல்நினோ நிலவரத்தை எதிர்கொள்ள அரசாங்கம் சிறந்த தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தம்மிக பட்டபெதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் அனைத்தும் வற்றிப்போயுள்ளன.
கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த கடும் வறட்சியால் பொலன்னறுவை மாவட்டத்தில் மெடிரிகிரிய கும்குனா குளம், காமிணி குளம் உட்பட பல குளங்கள் வற்றிப்போய் நெற்பயிர்கள் அழிந்துபோயுள்ளன.
நீர்நிலைகள் வற்றியதால் கிராந்துருகோட்டே பகுதியில் யானைகள் கூட்டமாக உணவு மற்றும் நீர் தேடி வரத் தொடங்கியுள்ளன.
மொணராகலை மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக காடுகளிலுள்ள புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் காய்ந்து நாசமாகியுள்ளன.
