மிலிந்த மொரகொடவின் சேவைக்காலம் முடிவுக்கு வருகின்றது!

Date:

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பதவியில் இருந்து விலகுவதற்கான தூதுவரின் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த் மொரகொட 29 ஆகஸ்ட் 2021 அன்று இந்தியாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

மொரகொட அமைச்சரவை அதிகாரங்களைக் கொண்ட உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதுடன், இலங்கையில் அமைச்சரவை அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது உயர்ஸ்தானிகர் இவரே என்பதும் விசேட அம்சமாகும்.

 

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...