க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளை தீர்மானம்

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா அல்லது குறித்த தினத்தில் நடத்துவதா என்பது தொடர்பில் நாளை (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையினை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான நேர அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி உயர்தர பரீட்சையினை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்ததுடன், ஒத்திவைப்பதற்கான தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

 

 

 

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...