ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்த தயாசிறி ஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பதவிக்கு சரத் ஏக்கநாயக்க பரிந்துரைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்கவை நியமிப்பதற்கு இதன்போது அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூட்டத்திற்கு கட்சியின் முன்னாள் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குறிப்பிடபப்ட்டுள்ளது.