ஒட்டுமொத்த உலகமே உறைந்து போன ‘இரட்டை கோபுர தாக்குதல்’ :இன்றுடன் 22 ஆண்டுகள்!

Date:

உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க்
நகரம் இதே திகதியில் 22  வருடங்களுக்கு முன் காலை 8:46 மணி, வீதியில்
இருப்பவர்கள் அதிர்ந்து போய் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை
கோபுரங்களை அதிர்ந்து பார்க்கிறார்கள்.

இந்த அதிர்ச்சிக்குக் காரணம், ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரட்டை கோபுரத்தை நோக்கி பறக்கிறது என்பதாலே.

சில நொடிகளில், இரட்டைகோபுரத்தின் வடக்கு கட்டிடத்தின் 93-99
இடைப்பட்ட பகுதியில் விமானம் மோதி வெடித்துசிதறியது.

வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11
பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது.

தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், அதாவது காலை 9:03க்கு மற்றொரு
விமானம் இரட்டைக் கோபுரத்தின் தெற்கு கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த விமானமும் அதே வாஷிங்கடன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்டது.

இந்த தாக்குதலையடுத்து கட்டிடங்கள் மலமலவன சரியத் தொடங்கியது. தாக்குதல் காரணமாக இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நியூயார்க் வான் முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது.

கட்டிடங்கள் தெருக்களில் சரியத் தொடங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிடங்கள் சிக்கிக் கொண்டிருந்தது ஒருபுறமிருக்க, வீதிகளில் சென்றவர்கள் மீதும் கட்டிடத்தின் பாகங்கள் விழத் தொடங்கியது.

என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. மற்றொரு விமானம் மீண்டும் வந்து தாக்குதல் நடத்தி விடுமா விடுமா எனத் தெரியவில்லை. நகரம் முழுவதும் அழுகுரல். இந்த காட்சிகளை அமெரிக்காவிலிருந்து நியூஸ் சேணல்கள் நேரலை செய்தது. சில மணி நேர வித்தியாசத்தில் அடுத்த தாக்குதல் நடந்தது.

ஆனால், இந்த முறை இரட்டை கோபுரத்தின் மீது அல்ல, அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் மீது.

அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே உறைந்து போனது. இந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாது உலகின் பல வல்லரசு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அல் கொய்தாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களில் வெளிநாட்டினர் உட்பட 2,996 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 25,000 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த தாக்குதல்களால் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது.

அனைவரும் இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு எது என்பதைத் தேடத்தொடங்கினர்.

தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது அல் கொய்தா. 19 பேரைக் கொண்டு இந்த தாக்குதலை அல் கொய்தா நடத்தியது.

இந்த தாக்குதலை நடத்திய அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் ஒரு சுரங்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து அமெரிக்கா அதிரடியாக விமானங்களின் மூலம் இராணுவத்தை அனுப்பி கொலை செய்தது. ஒசமா பின் லேடன் 2011ஆம் ஆண்டும் மே 2ஆம் திகதி கொல்லப்பட்டார்.

இந்த நாள் அமெரிக்காவின் வரலாற்றின் கருப்பு தினமாகவே மாறிப்போனது. இப்போதும் அந்த கொடூர தாக்குதல் காரணமாக அங்கு பலர் ஏதோ ஒரு வகையில் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

‘பீனிக்ஸ்’ பறவைசாம்பலில் இருந்து எழும் ‘பீனிக்ஸ்’ பறவை போல, இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், புதிதாக வர்த்தக மைய கட்டடம் 2014 நவ., 3ல் திறக்கப்பட்டது. ‘நேஷனல் செப்., 11 ‘மெமோரியல் அண்ட் மியூசியம்’, பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் நினைவு மையங்கள் திறக்கப்ட்டன.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...