மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!

Date:

மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா அறிக்கை ஒன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்குவது எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம்  02ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மாதம்  26ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை அபராதம் செலுத்தாமல் புதுப்பிக்கலாம்.

இதற்கிடையில், www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளம் மூலம் ஒன்லைன் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் பெறுவது, செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...