யில்வே பொறியியலாளர்கள் சங்கம் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
புகையிரத அதிகாரசபைக்கு அறிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தரத்துக்கேற்ப பதவி உயர்வை விரைவுபடுத்துமாறு நீண்டகாலம் கோரிக்கை விடுத்த போதும், கடந்த 5 வருடங்களாக எந்தவொரு தீர்வும் வழங்கப்படாத நிலையில் ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.