கடந்த வாரம் இடம்பெற்ற 78 வது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா நியூயோர்க் நகருக்கு பல உலகத் தலைவர்கள் வருகைத் தந்திருந்தார்கள்.
அந்தவகையில், நியூயோர்க்கில் உள்ள முதலாவது முஸ்லிம் பள்ளிவாசலுக்கு மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்கள் வருகைத் தந்திருந்தார்.
இதன்போது பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்ளச் சென்ற மலேசிய பிரதமர் இப்ராஹிம் அவர்கள் அன்றைய தினம் குத்பா என்றழைக்கப்படுகின்ற ஜும்ஆ பேருரையை ஆங்கிலத்தில் நிகழ்த்திய செய்தி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
முஸ்லிம் நாடொன்றின் பிரதமர் ஒருவர் பள்ளிவாசலில் தொழுகையையும் ஜும் தொழுகையையும் நடாத்துவது என்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு.
800 க்கும் மேற்பட்ட சபையினருக்கு முன்னால் ஆற்றிய தனது பிரசங்கத்தில் மலேசிய பிரதமர்,
பல இன மற்றும் பல மத சமூகத்தை நிர்வகிப்பதில் மலேசியாவின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
‘நாங்கள் எப்போதும் புரிதல், சகிப்புத்தன்மை மற்றும் பிறர் கலாச்சாரம் மற்றும் மதத்தைப் புரிந்துகொள்வதன் அவசியத்தை மேம்படுத்த முயற்சிக்கிறோம். நாம் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கு அதுவே முக்கியம், என்றார்.
அதேவேளை, முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையை பலப்படுத்துவதுடன், தகவல்களையும் அறிவையும் பெற வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
அந்தவகையில் மலேசிய பிரதமர் தன்னால் நாட்டையும் நாட்டு மக்களுடைய ஆன்மீக விவகாரங்களுக்கு வழிகாட்டல்களை வழங்கமுடியும் என்பதையும் தனது செயலினால் செய்து காட்டியிருக்கின்றார்.