கொரிய அரசு நடத்தும் செயற்கை நுண்ணறிவு இதழியல் பயிற்சி நெறி இந்த வாரம் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
தென்கொரியாவில் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி நெறிக்கு 15 அரசாங்க ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சிநெறியை தொடங்குவதற்கு முன் கடந்த 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை ஆன்லைன் மூலம் முதற்கட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
அதற்கமைய எங்கள் ஊடக நிறுவனமான NewsNow.lk இல் ஆலோசகராகப் பணிபுரியும் எஸ்.ஏ.எம்.ஃபவாஸ் அவர்களும் பயிற்சி நெறியில் பங்குபற்ற தகுதியைப் பெற்றிருப்பதில் பெருமை அடைகின்றோம்