பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Date:

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் தீர்மானத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விசாரணைக்காக பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மேலும் மேற்படி விசாரணை முடியும் வரை பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது என தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு தேவையான வரியை செலுத்தாமல் தங்க நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசியை கொண்டு வந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...