இலங்கையைச் சேர்ந்த 65 பணிப்பெண்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

Date:

பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள 65 இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் ரியாத் நகரங்களிலுள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 34 பேர் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 24 பேரும் ஓமானில் 07 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...

சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28)....