ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக்கொடி: மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு!

Date:

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், புனித ஸ்தலங்களிலும் கறுப்புக்கொடி ஏற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இதனை நடைமுறைப்படுத்துமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நாளை போயா தினத்தன்று (28) இரவு 7.00 மணி முதல் 7.30 மணி வரை அரை மணி நேரம் மின் விளக்குகளை அணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்த அரை மணி நேரம் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் வரும் முதல் புதன்கிழமை கொழும்பு – குருநாகல் பஹ வீதியில் திவுலப்பிட்டி பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 8.00 மணிக்கு மின் பாவனையாளர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு பேரணியை ஆரம்பிக்கவுள்ளன.

 

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...