கொழும்பில் முக்கியமான இடங்களில் குண்டு தாக்குதலை நடத்த திட்டம் என்ற தலைமைப்பின் அரச பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் சரியான முறையில் தெளிவுப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரியவருகிறது.
இது மிகவும் பாரதூரமான விடயம் என்பதால், அதில் உண்மை, பொய் சம்பந்தாமாக மேலதிக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்க முடியாது என்பதால், கடந்த கால பாடங்களை கற்று ஆபத்து குறித்து தேடிப்பாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக நாட்டின் சட்டத்திற்குள் எடுக்க வேண்டிய உச்சப்பட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.