மாத்தறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை அறிவிப்பு!

Date:

மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோரின் தலைமையில் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் கடந்த 05 மற்றும் 06ம் திகதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...