Isreal Sri Lanka solidarity movement அமைப்பு நேற்று முன்தினம் மகாசங்கத்தினரிடையே கூட்டத் தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை இஸ்ரேல் ஆதரவு குறித்தும் தற்போது நடைபெறும் யுத்தத்தில் இலங்கை எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.
யுத்தகாலத்தில் இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுகள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் இலங்கை இஸ்ரேலிய 3000 வருடக கால வர்த்தக உறவுகள் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டதுடன் இஸ்லாத்துக்கு முந்தய அறபு வர்த்தக உறவு இஸ்ரேல் வர்த்தக உறவாக இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டன.
சுலைமான் அலை (அக்மேடியன் ) கால இலங்கை வர்த்தக உறவுகள் இந்த 3000 கால இஸ்ரேல் உறவாக இங்கு எடுத்துக் காட்டப்பட்டன.
இதே வேளை காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள யுத்தத்தினால் கொலைசெய்ப்பட்ட இலங்கைப் பெண்ணின் பூத உடல் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.