இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சரை சந்திக்க தமிழ் எம்.பிக்கள் முயற்சி

Date:

இலங்கைக்கு  உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க தமிழ் கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கின் ஏனைய கட்சிகளும் தெற்கின் சில தமிழ் கட்சிகளும் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க நேரத்தை கோரியுள்ளன.

என்றாலும், இம்முறை ‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ளவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளதுடன், அவரது நேர அட்டவணையும் இறுக்கமாக உள்ளது.

இன்றையை தினம் ‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ளும் எஸ்.ஜெய்சங்கர் பிற்பகல் மற்றும் மாலை வேளையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

நாளைய தினம் திருகோணமலையில் பல்வேறு நிகழ்வுகளில் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளதுடன், மாலை இந்தியா திரும்பவும் உள்ளார்.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...