பலஸ்தீன மக்களுக்கான நிவாரண உதவிகளை இலங்கையில் ஒப்படைப்பதற்கான முகவர்களின் பட்டியலை பலஸ்தீன வெளிவிவகார மற்றும் வெளிநாட்டினருக்கான அமைச்சு இலங்கையிலுள்ள பலஸ்தீன தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
காஸா மக்களுக்கு உதவ விரும்புகின்ற நிறுவனங்களும் தனிநபர்களும் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தமது நிவாரணங்களை கையளிக்கலாம் என இலங்கையிலுள்ள பலஸ்தீன தூதரகம் அறிவித்துள்ளது.