கொழும்பில் குண்டு தாக்குதல் திட்டம் உண்மையா, பொய்யா? கேள்வி எழுப்பிய சஜித்

Date:

கொழும்பில்  முக்கியமான இடங்களில் குண்டு தாக்குதலை நடத்த திட்டம் என்ற தலைமைப்பின் அரச பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் சரியான முறையில் தெளிவுப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரியவருகிறது.

இது மிகவும் பாரதூரமான விடயம் என்பதால், அதில் உண்மை, பொய் சம்பந்தாமாக மேலதிக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்க முடியாது என்பதால், கடந்த கால பாடங்களை கற்று ஆபத்து குறித்து தேடிப்பாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக நாட்டின் சட்டத்திற்குள் எடுக்க வேண்டிய உச்சப்பட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...