சட்டத்தரணிகள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அதிருப்தி!

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது கடமைகளை நிறைவேற்றும் போது சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

உயிருக்கு அஞ்சாமல் தமது தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும் சுதந்திரம் சட்டத்தரணிகளுக்கு இருக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கலகெதர நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஒருவரால் பெண் சட்டத்தரணி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கலகெதர நீதிமன்ற அமர்வில் இருக்கும் போது பெண் சட்டத்தரணி ஒருவரின் பாதுகாப்பு சவால் செய்யப்பட்ட சம்பவத்தை சங்கம் தீவிரமாக கவனத்திற்க் கொள்கிறது என கௌசல்யா நவரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​பல சட்டத்தரணிகள் ஆஜராகி நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த பெண் சட்டத்தரணிக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, உறுப்பினர்களின் உரிமைகள் குறிப்பாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஏனைய விடயங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இன்றியமையாதது என வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...