மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், களு கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.