இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க தமிழ் கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கின் ஏனைய கட்சிகளும் தெற்கின் சில தமிழ் கட்சிகளும் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க நேரத்தை கோரியுள்ளன.
என்றாலும், இம்முறை ‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ளவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளதுடன், அவரது நேர அட்டவணையும் இறுக்கமாக உள்ளது.
இன்றையை தினம் ‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ளும் எஸ்.ஜெய்சங்கர் பிற்பகல் மற்றும் மாலை வேளையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
நாளைய தினம் திருகோணமலையில் பல்வேறு நிகழ்வுகளில் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளதுடன், மாலை இந்தியா திரும்பவும் உள்ளார்.