மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது!

Date:

புனித அல் குர்ஆனுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டமைக்காக யூ டியூப் பதிவாளரும் பிரபல ஜோதிடருமான இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக கொழும்பு – 02 இல் வசிக்கும் என்.எம்.தாஜுடீன் உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

29 செப்டம்பர் 2023 அன்று யூ ட்யூப் சேனலில் இந்த அவதூறான கருத்துக்களை இந்திக்கத் தொட்டவத்த பதிவேற்றியுள்ளார்.

இதன்படி இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 120, 291A, 291B மற்றும் ICCPR சட்டத்தின் மற்றும் 3(2) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...