மாணவர்களை கட்டாயப்படுத்தி பொலித்தீன் உறைகளை உண்ண வற்புறுத்திய அதிபருக்கு இடமாற்றம்: கல்வி அமைச்சர்

Date:

நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் சிலரை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு அதிபர் வற்புறுத்திய சம்பவத்தை அடுத்து, உடன் அமுலுக்கு வரும் வகையில், கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு வசதியாக அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை கட்டாயப்படுத்தி லஞ்ச் சீட்டுகளை உட்கொள்ள வைத்ததாக கூறப்படும் ரம்புக்பிட்டிய பிரதேச அதிபரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபர் கட்டாயப்படுத்தியதால் பொலித்தீன்களை உட்கொண்ட ஏழு மாணவர்களில் கடுமையாக சுகவீனமுற்ற இரு மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர்.

இந்தச் சம்பவம் மாணவர்களின் மதிய உணவு இடைவேளையின்போது இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில், சில மாணவர்கள் தங்கள் உணவை பொலித்தீன் மற்றும் பத்திரிகைத் தாள்களில் சுற்றி கொண்டு சென்றுள்ளனர். இதனைக் கண்ட அதிபர் அவற்றையும் உண்ணுமாறு மாணவர்களை வற்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது

இதனால் பாதிக்கப்பட்ட ஏழு மாணவர்களில் இரு மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே குறித்த பாடசாலையின் அதிபர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...