இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச சமாதான மாநாடு 2023 கடந்த 03ம் திகதி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையால் (UNPAF) பண்டாரநாயக்க ஞாபககார்த்தத சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய செயலாளர் கலாநிதி ஹமிட் ஸைடின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமன சான்றிதழை ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய பிராந்திய சமாதான தூதுவர், பேராசிரியர். டாக்டர். ஜி. ஜெகப் ஸைமன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இணைப்பாளர் கலாநிதி தேசமான்ய கெளரவ கே.ஏ.எஸ்.எம்.கே. ரத்நாயக்க உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.