யுக்திய சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பம்!

Date:

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால் 03 நாட்களுக்கு அந்த நடவடிக்கைகளை குறைக்க நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த 25ஆம் திகதி வரை போதைப்பொருளுடன் தொடர்புடைய 13,666 பேர் “யுக்திய” நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,097 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...