‘இஸ்ரேல் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருப்பதாக’ அந்த நாட்டின் பத்தி எழுத்தாளர் ஆரி ஷாவிட் கூறுகிறார்- லத்தீப் பாரூக்

Date:

தனது நாடான இஸ்ரேலுக்கு மத்திய கிழக்கில் இனி எதிர்காலமே இல்லை என்று அந்த நாட்டின் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான ஆரி ஷாவிட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பத்தி எழுத்தாளர் ஆரி ஷாவிட்

இன்று காஸாவில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு மூலோபாயம் மிக அவசரமாகத் தேவைப்படும் ஒரு மோசமான நிலைக்கு இஸ்ரேல் வந்துள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக இஸ்ரேலிடம் மட்டுமன்றி அமெரிக்காவிடம் கூட அவ்வாறானதோர் திட்டம் இல்லை.

ஹீப்று மொழியில் வெளியாகும் பிரபலமான செய்திப் பத்திரிகையான ஹாரெட்ஸில் ஆரி ஷாவிட் எழுதியுள்ள ஒரு ஆக்கத்தில் “இஸ்ரேல் தனது இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் உள்ளடங்களாக பல அரபு நாடுகளுடன் மிகவும் தீவிரமான, விரிவான மற்றும் அவசரமான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது.

காஸாவுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்ற போர்வையில் பலஸ்தீன போராட்டக் குழுக்களை உடனடியாக ஒரு யுத்த நிறுத்தத்துக்கு இணங்க வைக்கும் வகையில் அவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே இந்தப் பேசசுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த யுத்த நிறுத்தத்தை அமெரிக்கா உடாக இஸ்ரேல் அவசரமாக வேண்டி நிற்கின்றது என்பதே உண்மையாகும். அப்போது தான், தான் வீழ்ந்துள்ள காஸா எனும் புதைகுழியில் இருந்து தனது படை வீராகளையும் இராணுவ வாகனங்களையும் வாபஸ் வாங்கி மீண்டு வரமடியும் எனபதே இஸ்ரேலின் இன்றைய நிலையாகும்.

தற்போது இஸ்ரேல் அதிகமான படைவீரர்களையும் யுத்த வாகனங்களையும் இழந்து வருகின்றது.

காஸாவின் தெருக்களில் இஸ்ரேலிய படை வீரர்களும் இராணுவ வாகனங்களும் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு சிக்கி உள்ளன.

பலஸ்தீன போராளிகள் பதுங்கி இருந்து தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் இஸ்ரேல் இராணுவம் திணறிக் கொண்டிருக்கின்றது.

இந்தத் தாக்குதல்களில் சிக்கி பெருமளவான இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளும் படை வீரர்களும் மரணத்தை தழுவிக் கொண்டிருப்பதாக சியோனிஸ இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிடவும் தொடங்கி விட்டன.

பலஸ்தீன தரப்பை பொருத்தமட்டில் ஒன்றில் வெற்றி அல்லது உயிர்த்தியாகம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். வரலாறு இதுவரை கண்டிராத மிகவும் கடினமான ஒரு தரப்புக்கு நாங்கள் முகம் கொடுத்து வருகின்றோம்.

அவர்களது உரிமைகளை ஏற்றுக் கொண்டு அதற்கான அங்கீகாரத்தை வழங்கி ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதை விட வேறு தீர்வுகளே கிடையாது என ஆரி ஷாவிட்  தனது ஆக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவித்துள்ள கருத்துக்கள்,

அவதானத்துக்கு உரியவையாகும் ‘திரும்பி வரவே முடியாத ஒரு முனைக்குள் நாம் சென்றுள்ளது போல் தெரிகின்றது.

ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வந்து, குடியேற்றங்களை நிறுத்தி சமாதானத்தை நாடுவதை விடஇஸ்ரேலுக்கு சாத்தியமான வேறு தெரிவுகள் இனிமேல் கிடையாது. சியோனிஸத்தை இனிமேல் மறுசீரமைத்து ஜனநாயகத்தை காப்பாற்றவும் முடியாது.

இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை இனிமேல் சீர் செய்யவும் முடியாது. இந்த நிலை இப்படியே தொடருமானால் இந்த நாட்டில் இனிமேலும் வாழுவதில் ஒரு சுவை இருக்காது.

ஹாரெட்ஸில் இனி எழுதுவதில் கூட ஒரு சுவை இருக்காது. இந்த நாட்டை விட்டு நாம் வெளியேற வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்பே றோஜெல் அல்பர் குறிப்பிட்டிருந்தார்.

அதை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு தான் நாம் இப்போது வந்துள்ளோம் என்று அந்த ஆக்கம் தொடர்ந்து செல்கின்றது.

இஸ்ரேலியர்களைப் பொருத்தமட்டில் தங்களை இஸ்ரேலியர்கள் என்றோ அல்லது யூதர்கள் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

காரணம் பெரும்பாலும் ஒவ்வொரு இஸ்ரேலிய பிரஜைக்கும் இன்னும் ஏதோ ஒரு நாட்டின் பிரஜா உரிமை இருக்கின்றது.

அந்த நாடுகளுக்கான கடவுச் சீட்டுக்களும் அவர்களிடம் உள்ளன. எனவே தொழில்நுட்ப ரீதியாக மட்டும் அன்றி உளவியல் ரீதியாகக் கூட அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றன.

எனவே அவர்கள் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் குட்பை சொல்லிவிட்டு சென்பிரான்சிஸ்கோ, பேர்லின், பிரான்ஸ் என பயணிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி உள்ளது.

அதன்பிறகு அங்கிருந்து வேண்டுமானால் அவர்கள் புதிய ஜெர்மனியின் தீவிர தேசியவாதத்தின் பூமியை அல்லது புதிய அமெரிக்க தீவிர தேசியவாதத்தின் பூமியை நோக்கி பயணிக்கலாம்.

இப்போதைக்கு இஸ்ரேல் என்ற நாடு அதன் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருப்பதை அமைதியாக பார்ததுக் கொண்டிருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. நாங்கள் மூன்று அடிகள் பின்னால் வந்து யூத ஜனநாயக நாடு மூழ்குவதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கலாம். இன்னமும் நாங்கள் திரும்பிவர முடியாத முனைக்குள் முழுமையாக பிரவேசிக்காததால் தீர்வு இன்னும் சாத்தியமாகின்றது. ஆம் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதும், குடியேற்றங்களை நிறுத்துவதும், சியோனிஸத்தை மறுசீரமைப்பதும், ஜனநாயகத்தை பாதுகாப்பதும், நாட்டை பிளவு படுத்துவதும் இன்னமும்
சாத்தியமாகவே இருக்கின்றது.

நான் எனது விரலை நெத்தன்யாஹு, லைபர்மேன் மற்றும் நவ நாசிக்களின் கண்களுக்குள் வைக்கின்றேன். சியோனிஸம் என்ற மயக்க நிலையில் இருந்து அவர்கள் விழித்தெழ வேண்டும என்பதற்காக அவ்வாறு செய்கிறேன்.

டிரம்ப், குஷ்னர், பைடன், பராக் ஒபாமா மற்றும் ஹிலாறி கிளின்டன் ஆகியோரால் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர முடியாது. ஐக்கிய நாடுகள் சபையாலும் ஐரோப்பிய யூனியனாலும் குடியேற்றங்களை முடிவுக்கு கொண்டு வரவும் முடியாது.

இனி இஸ்ரேலைக் காப்பாற்றக் கூடிய உலகில் உள்ள ஒரே சக்தி இஸ்ரேலியர்கள் மட்டுமே. பலஸ்தீனர்கள் இந்த மண்ணில் வேரூன்றி நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தை அங்கீகரிக்கக் கூடிய புதிய அரசியல் மொழியை உருவாக்குவதன் மூலம் தான் இதை செய்ய முடியும்.

மூன்றாவது வழியொன்றை தேடுமாறு நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். அது இங்கே மரணிப்பதற்காக அல்ல உயிர் தப்பிக் கொள்வதற்கான வழி.

இஸ்ரேலியர்கள் பலஸ்தீன பூமிக்குள் காலடி எடுத்து வைத்தது முதல், சியோனிஸ இயக்கத்தால் உருவாககப்பட்ட ஒரு பொய்யின் விளைவாகத் தான் அவர்கள் அங்கு வந்திருக்கின்றனர் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்தக் காலப்பகுதியில் ஏமாற்றுதல் என்ற யூத குணாதிசயத்தை அது வரலாறு முழுவதும் பயன்படுத்தியது.

ஹிட்லர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஹொலோகோஸ்ட் சம்பவத்தை  வெகுவாக மிகைப்படுத்திக் காட்டி பலஸ்தீனம் தான் தங்களுக்காக வாக்களிக்கப்பட்ட பூமி என்றும் அவர்கள் குறிப்பிடும் ஒரு ஆலயம் அல்அக்ஸா வளவுக்குள் இருக்கின்றது என்றும் உலகை நம்பகைவக்க அவர்களால் முடிந்தது.

இவ்வாறு தான் ஒரு ஓநாய் செம்மறி ஆடாக மாற்றப்பட்டது. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் வரி செலுத்தும் பொது மக்களின் பணம் இதற்காக உறிஞ்சப்பட்டது.

ஒரு அணு ஆயுத அசுரனாக மாறுகின்ற வரைக்கும் இது இடம்பெற்றது. ஐரோப்பிய மற்றும் யூத தொல்பொருள் ஆய்வாளர்களின் உதவியை நான் நாடி நிற்கின்றேன். டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் இஸ்ரேல் பிலின்ஸ்டன் இதில் மிகவும் பிரபலமானவர்.

“அவர்கள் கூறும் ஆலயம் பற்றிய கதை முற்றிலும் பொய்யானது. இது நடைமுறையில் இல்லாத ஒரு விசித்திர புனைகதை. இதுவரை இடம்பெற்ற எல்லா அகழ்வு ஆய்வுகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அது முற்றாக அழிந்து போன ஒரு விடயம் என்பதை நிரூபித்துள்ளன.

யூத குறிப்பேடுகள் பலவற்றில் இதுபற்றி மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் பலவற்றின் அகழ்வு ஆய்வாளாகளும் இதை உறுதி செய்துள்ளனர். இந்தப் பொய்களால் ஏற்பட்ட சாபம் தான் இன்று இஸ்ரேலியர்களை தினசரி வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது.

அது ஜெரூஸலம், கலீலி, நப்லுஸ் ஆகிய இடங்களில் உள்ளவர்களின் கரங்களில் உள்ள கத்தியின் வடிவத்தில் அல்லது ஜாபா, ஹைபா, ஆக்ரே ஆகிய இடங்களில் உள்ள சாரதிகளின் வடிவத்தில் அலலது அந்த சமூகங்களில் உள்ளவர்களின் கரங்களில் உள்ள கற்களின் வடிவத்தில் அவர்களின் முகங்களில் அன்றாடம் ஓங்கி அறைந்த வண்ணம் உள்ளது.

பலஸ்தீனத்தில் தங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை இஸ்ரேலியர்கள் இப்போது நன்கு உணர்ந்துள்ளனர். அவர்கள் கூறிய பொய்யைப் போல் அது மக்கள் இல்லாத ஒரு பூமியல்ல.

அது பலஸ்தீனர்கள் இல்லாத ஒரு பூமியல்ல மாறாக இஸ்ரேலியர்கள் மீது மேலாதிக்கம் கொண்ட பலஸ்தீன மக்களின் பூமி என இன்னொரு சக எழுத்தாளர் (கிடியோன் லெவி) உம் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் ஒரு இடது சாரி போக்குள்ள சியோனிஸவாதி.

மனிதகுலத்தின் ஏனைய பிரிவுகளில் இருந்து வித்தியாசமான இயல்பினைக் கொண்டவர்கள் தான் பலஸ்தீனாகள். நாங்கள் அவர்களின் பூமியை ஆக்கிரமித்தோம்.

அவர்களது இளைஞர்களையும் யுவதிகளையும் விபசாரிகள் என்றோம். ஒரு சில வருடங்கள் கழிந்தால், அவர்கள் தமது சொந்த பூமியையும் தாயகத்தையும் மறந்து விடுவார்கள் என்று நாம் நம்பினோம்.

அப்படி நாம் நம்பிக் கொண்டிருந்த போதுதான் 1987ல் அவர்களின் இளைய தலைமுறை கிளர்ந்து எழுந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அவர்களை சிறையில் அடைத்தோம். சிறைக்குள்ளேயே அவர்களை வைத்துவிடலாம் என்று நாம் எண்ணினோம். ஆனால் பல வருடங்கள் கழிந்து அவர்கள் நன்றாக பாடங்களைக் கற்றுக் கொண்டார்கள் என நாம் எண்ணணிய வேளையில், 2000மாம் ஆண்டில் அவர்கள் ஒரு ஆயுத போராட்ட எழுச்சியோடு எங்களை சந்தித்தார்கள்.

நான் அவர்களின் பசுமையையும் காணிகளையும் தின்றேன். அவர்களது வீடுகளை தரை மட்டமாக்குவோம் என்று நாம் கூறினோம்.

இன்னும் பல வருடங்களுக்கு அவர்களை முற்றுகையின் கீழ் வைத்திருப்போம் என்றோம். ஆனால் அதற்கிடையில் நாம் முற்றிலும் எதிர்ப்பார்க்காத வகையில் அவர்கள் எம்மீது தாக்குதல் நடத்த எவுகணைகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

எமது முற்றுகைகளையும் நாம் அவர்களுக்கு இழைத்த அழிவுகளையும் மீறி அவர்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர்.

பிறகு நாம் பிரிவினைவாத தடுப்புச் சுவரை ஏற்படுத்தி கம்பி வேலிகளை இட்டு அவர்களுக்கான எமது திட்டத்தை ஆரம்பித்தோம்.

ஆனால் அவர்கள் நலத்துக்கு கீழாகவும் நிலத்தடி சுரங்க வழியாகவும் எம்மிடம் வந்துள்ளனர். கடந்த யுத்தத்தில் அவர்கள் எம்மீது பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தும் வரை நாம் எமது சிந்தனைகளால் அவர்களோடு போரிட்டோம்.

ஆனால் அவர்களோ இஸ்ரேலிய செய்மதியை (அமோஸ்) கைப்பற்றி இஸ்ரேலில் உள்ள ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் பயங்கரத்தை கொண்டு வந்துள்ளனர். நாம் அவர்கள் மீது அச்சத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தி அதற்கான ஒலிபரப்புக்களை நடத்திக் கொண்டிருந்தோம்.

ஆனால் அவர்களது இளைஞர்கள் இஸ்ரேலின் அலைவரிசை இரண்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் உலக வரலாறு இதுவரை கண்டிராத ஒரு கடினமான மக்கள் பிரிவுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.

அவர்களை அங்கீகரித்து அவர்களின் உரிமைகளை வழங்கி ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதை தவிர வேறு தெரிவுகள் எதுவுமே நமக்கில்லை.

மூலம்: ஹீப்று மொழி பத்திரிகையான ஹாரெட்ஸில் இருந்து தொகுக்கப்பட்டது

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...