உலகில் மிகவும் சுவையான இளநீர் இலங்கையில்: இளநீர் ஏற்றுமதியில் வருமானம் அதிகரிப்பு!

Date:

இலங்கையில் இருந்து ஒவ்வொரு வாரமும் சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இளநீர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2022 இல் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு ஆறு பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில் இளநீர் தோட்டங்களை ஒரு பெருந்தோட்ட பயிராக பயிரிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், உலகில் பல நாடுகள் இளநீர் பயிரிட முயற்சித்தாலும் உலகில் மிகவும் சுவையான இளநீர் இலங்கை இளநீர் என்றும், இலங்கையில் இளநீரை பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...