கராத்தே போட்டியில் புத்தளம் பாடசாலை மாணவர்கள் வெற்றி!

Date:

வயம்ப பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) கராத்தே சுற்றுப் போட்டியில் புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

21 வயதிற்குட்பட்ட கராத்தே மற்றும் குமித்தே ஆகிய இரு போட்டிகளிலும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் ஏ.எம்.அஸாம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

14 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் மதுரங்குளி எக்ஸெலன்ஸ் ஆங்கில பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் யூ. தாமீர் தங்கப் பதக்கத்தையும், புத்தளம் காஸிம் சிட்டி பாடசாலை மாணவன் மாஷின் அஹ்மத், 15 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இந்த மாணவர்களை “டபில்யூ.எஸ்.கே.ஏ.” கழகத்தின் கராத்தே பிரதான போதனாசிரியரான சிஹான் எம். பைரோஸ் பயிற்றுவித்திருந்தார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...